Enna Seiguvean Yealai Adiyean – என்ன செய்குவேன் ஏழையடியேன்

Deal Score0
Deal Score0

பல்லவி

என்ன செய்குவேன் ஏழையடியேன்

அனுபல்லவி

அண்ணலேசையா – அற்பனானையா
என்னைப்பொருளாய் – எண்ணினதற்கீடாய்

சரணங்கள்

1. அஞ்ஞானத்தில் தானே – அமிழ்ந்திருந்தேனே!
அகக் கண்கெட்டு – அலைந்தேன் முற்றுமே;
மெஞ்ஞான மூட்டி – வெளிச்சமுங் காட்டி
என்னை இரட்சித்தாய்! இதற்கு நான் ஈடாய் – என்ன

2. மாமிச இச்சை – லோகம் பேராசை
மயக்கங் கொண்டு – மாசில் புரண்டு
தீமைபுரியச் சென்றோனை வலியத்
திருப்பி இழுத்த – செயலிதற்கு ஈடு – என்ன

3. செத்த நான் பிழைக்க – ஜீவனை அளிக்க
திவ்ய நாதனே – தேவ சுதனே
மெத்தப் பாடுபட்டு – மீட்க என்னையே
சித்தம் வைத்தாயே – சேயன் இதற்கு ஈடு – என்ன

4. ஆத்மா தேகம் ஆவி – அனைத்தும் இப்பாவி,
மீட்பா இயேசுவே! மேசியா கோவே!
பூர்த்தியாகவே படைத்தேனே தேவே!
ஏற்றுக்கொள்ளையா – ஏழையைக் காரையா! – என்ன

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo