
Ennalae Jeevan Vidutheero – என்னாலே ஜீவன் விடுத்தீரோ
Ennalae Jeevan Vidutheero – என்னாலே ஜீவன் விடுத்தீரோ
பல்லவி
என்னாலே ஜீவன் விடுத்தீரோ, – ஸ்வாமீ?
இத்தனை பாட்டுக்கிங்கே அடுத்தீரோ?
அனுபல்லவி
பொன்னாட்டதிபதி பரமன் ஆட்டுக்குட்டியே,
பொறுமைக் களவிலாத கிருபைத் திருக்குமாரா,
பூண்டு பொற் குருசினில் அறையுண்டெனை
மீண்டனுக்ரக மிட நெறி கொண்டதோ? – என்
சரணங்கள்
1. கள்ளனைப்போல் கட்டுண்ட பரிதாபம், – மெய்ப்பூங்
காவில் ஆத்துமத்துற்ற மனஸ்தாபம்,-வேர்த்து
வெள்ளமாய் ரத்தம் புரண்ட சோபம்,-யாரால்
விபரித்து முடியும் உன் பிரஸ்தாபம்?
எள்ளத்தனை அன்பிலா உள்ளத் துரோகி நானே;
எனால் உமக்கென்ன லாபம்? யேசு
மனா பரப்ரம திரு வுளமோ இது? – என்
2. சிலுவை மரத்தில் கைகால் நீட்டி, தேவரீர்
திருவிலாவைத் துளைக்க ஈட்டி, காயம்
வலிய அன்பின் கடைக்கண் காட்டி,-இன்னம்
வரவழைக்கிறீர் தயை பாராட்டி;
விலைகொடுத்தெனைக் கூட்டி, மிக்க சலாக்யம் சூட்டி,
மீண்டவாறிது மிக்க விசாலமே,
ஆண்டவா, அது பக்கிஷ நேசமே. – என்
Ennalae Jeevan Vidutheero Song Lyrics in English
Ennalae Jeevan Vidutheero Swami
Iththani Paattukingae Adutheero
Ponnattathipathi Paraman Aattukuttiyae
Porumai Kalavilatha Kirubai Thirukumaara
Poondu Por Gurusinil Araiyundanai
Meedanukraga Mida Neari Kondatho
1.Kallanai Poal Kattunda Parithaabam Meipoong
Kaavil Aathumaththuttra Manasthaabam Vearthu
Vellamaai Raththam Puranda Sobam Yaaraal
Vibarithu Mudiyum Un Pirasthaabam
Ellathanai Anbilaa Ulla Thorogi Naanae
Enaal Umakenna Laabam Yesu
Manaa Pararama Thiruvulamo Ithu
2.Siluvai Maraththil Kaikaal Neetti Devareer
Thiruvilavai Thulaikka Eetti Kaayam
Valiya Anbin Kadaikkan Kaatti Innam
Varavalaikkireer Thayai Paaratti
Vilai Koduthanai Kootti Mikka Salakyam Sootti
Meendavaarithu Mikka Visalamae
Aandava Athu Bakkisha Neasamae – En