Entha Vealaiyum Adiyanodirum – எந்த வேளையும் அடியனோடிரும்

Deal Score0
Deal Score0

எந்த வேளையும் அடியனோடிரும்

பல்லவி

ஆதி யாம் மகா ராசனே,-எந்த வேளையும்
அடிய னோடிரும், ஈசனே

அனுபல்லவி

தீதில்லா சருவேசா, தேசுறும் பிரகாசா,
பாதகன் யான் மிகு பலவீனன் ஆனதால், – ஆதியாம்

சரணங்கள்

1. பாவி பெலனால், ஐயனே,-நின்றால் என்னைப்
பகைவர் ஜெயிப்பார், மெய்யனே;
தேவா, துணை நீர் ஐயனே;-சிறியனிடம்
சேர்ந்தே வசியும், துய்யனே,
மேவும் தஞ்சம் எனக்கு வேண்டும், காவலன் நீரே;
சாவுவரையும் என்னைத் தாங்கி அரவணையும். – ஆதியாம்

2. இரக்கம் பொழிய வாருமே,-கிருபையாக,
இறைவா, என்னிடம் சேருமே;
உருக்கம் நிறைந்த நீருமே;-அனவரதம்
உந்தம் அருளைத் தாருமே;
செருக்காய் எம்மீ திகலோர் சேதம் செய்ய நினைக்கும்
திருக்கை அகற்றி என்னில் தினமும் அருள்புரியும். – ஆதியாம்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo