எருசலேம் உன்னை – Erusalem Unnai
எருசலேம் எருசலேம் உன்னை
சிநேகிப்போர் சுகித்திருப்பார்கள்
உன் அலங்கத்திற்குள்ளே சமாதானம்
அரண்மனைக்குள்ளே பூரண சுகம்
1. கர்த்தர் உன்மேல் மனம் இறங்குகிறார்
ஆதரவாய் எழுந்து நிற்கின்றார்
தயை செய்யும் காலம் வந்தது
குறித்த நேரமும் வந்துவிட்டது
விழித்தெழு சீயோனே
வல்லமையை தரித்துக்கொள்
2.துரத்துண்ட இஸ்ரவேலரை
துரிதமாய் கூட்டிச்சேர்க்கின்றார்
சீயோனை திரும்ப கட்டுகிறார்
மகிமையிலே காட்சியளிப்பார்
3. பூமியின் ஜனங்களுக்குள்ளே
புகழ்ச்சியும் கீர்த்தியுமவாய்
உன்னிலிருந்து வேதம் வெளிப்படும்
கர்த்தர் வசனம் பிரசித்தமாகும்
4. இரவும் பகலும் மௌனமாயிராத
ஜாமக்காரர் உன் மதில்மேல்
அமரிக்கையாய் இருப்பதில்லை
அமர்ந்திருக்க விடுவதில்லை
5. மலைகள் குன்றுகள் நடுவே
மிக மேலாய் நிலைநிறுத்துகிறார்
மக்கள் இனம் தேடி வருவார்கள்
ஓடி வந்து மீட்படைவார்கள்
6. கர்த்தர் உன்னை விரும்பினபடியால்
தெரிந்துகொண்டார் உறைவிடமாய் – அவர்
அமர்ந்திருக்கும் அரியணை நீ தான்
அகிலத்திற்கும் வெளிச்சம் நீ தான்