Eththanai Naavaal Thuthipean – எத்தனை நாவால் துதிப்பேன்

Deal Score+1
Deal Score+1

எத்தனை நாவால் துதிப்பேன் – Eththanai Naavaal Thuthipean

பல்லவி

எத்தனை நாவால் துதிப்பேன்-எந்தன்
கர்த்தா உன் கருணையைப் பாடிப் புகழ்ந்து.

அனுபல்லவி

நினைக்க நினைக்க எந்தன் நெஞ்சமெல்லாம் உருகும்,
நின்னைச் சொல் மாலையால் சூட்டி மகிழும். – எத்தனை

சரணங்கள்

1. நம்பினோரல்லோ அறிவார்-எந்தன்
தம்பிரானே உந்தன் கம்பீர குணம்,
அம்பரா உன் அன்பின் அதிசய நடத்துதல்
சம்பூரண சவரட்சணை செல்வம். – எத்தனை

2. பிரார்த்தனை கேட்கும் பெம்மானே-இந்தப்
பேதை பலவீனம் பாராதருள் கோனே!
சரணென்றுன் செம்பாத மலரடி சேர்ந்தோர்
தாவிப் பிடித்துக் கவலை தீர்த்தோனே! – எத்தனை

3. துணிவாய் என் நெஞ்சே தீவிரமாய்-மிகத்
தொழுது ஆண்டவன் செயல் நினைந்து,
எண்ணில் அடங்காது இறைவனின் கிருபை
விண்ணவன் சேவையில் வீரமாய்ச் செல்லு. – எத்தனை

Eththanai Naavaal Thuthipean Lyrics in English 

Eththanai Naavaal Thuthipean-Enthan
Karthaa Un karunaiyai Paadi Pugalnthu

Ninaikka Ninaikka Enthan Nenjamellam Urugum
Ninnai Sol Maalaiyaal Sootti Magilum – Eththanai

1.Nambinorallo Arivaar – Enthan
Tambiraanae Unthan Gambeera Gunam
Ambara un Anbin Adisaya Nadaththuthal
Samboorana Savaratchanai Selvam

2.Piraarththanai Keatkkum Pommaanae -Intha
Peathai Balveenam Paaraatharul Konae
Saranentren sembaatha Malaradi Seanthaar
Thaavi Pidithu kavalai Theerthonae

3.Thunivaai En Nenjae Theeviramaai -Miga
Thozhuthu Aandavan Seyal Ninanthu
Ennil Adangathu Iraivanain Kirubai
Vinnavan Seavaiyil Veeramaai Sellu

https://www.worldtamilchristians.com/old-tamil-christmas-songs-lyrics/

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo