En metpar ratham sinthi என் மீட்பர் இரத்தம் சிந்தி
1. ஹா! என் மீட்பர் இரத்தம் சிந்தி
என் ராஜா மாண்டாரோ?
ஏழைப் புழு எனக்காக
ஈன மடைந்தாரோ?
பல்லவி
என்னை நினைத்திடும் நாதா
என்னை நினைத்திடும்
உம் கஸ்திகளை எண்ணியே
என்னை நினைத்திடும்
2. என் பாவத்தினாலல்லவோ
அவர் கஸ்திப்பட்டார்
அற்புதமாம் அன்பல்லவோ
ஆரிதை மறுப்பார் – என்னை
3. வெயில் மறைந்திருண்டதே
ஒளியும் போனதே
பாவிகளாம் மானிடர்க்காய்
சிருஷ்டிகர் மாண்ட நாள் – என்னை
4. நேசரே இதற்கு ஈடாய்
நீசன் நான் என் செய்வேன்
பாசத்தோடெந்தனையே நான்
படைத்தேனுமக்கு – என்னை