இதயங்கள் மகிழட்டும் – Idhayangal magilatum
இதயங்கள் மகிழட்டும்
முகங்கள் மலரட்டும் (சிரிக்கட்டும்)
மனமகிழ்ச்சி நல்ல மருந்து
1. மன்னித்து அணைத்துக்கொண்டார்
மகனாய் சேர்த்துக்கொண்டார்
கிருபையின் முத்தங்களால்
புது உயிர் தருகின்றார்
கோடி நன்றி
பாடிக் கொண்டாடுவோம்
2. அவரது மக்கள் நாம் அவர் மேய்க்கும் ஆடுகள் நாம்
தலைமுறை, தலைமுறைக்கும் நம்பத்தக்கவரே
3. தாய் மறந்தாலும் மறக்கவே மாட்டார்
உள்ளங்கைகளிலே பொறித்து வைத்துள்ளார்
4. தண்டனை நீக்கிவிட்டார் சாத்தானை துரத்திவிட்டார்
நடுவில் வந்துவிட்டார் தீங்கைக் காணமாட்டோம்
5. உண்டாக்கினார் நம்மை, அவரில் மகிழ்ந்திருப்போம்
ஆட்சி செய்கின்றார் அந்த ராஜாவில் களிகூருவோம்
6. தமது ஜனத்தின்மேல் பிரியம் வைக்கின்றார்
அதிசய இரட்சிப்பினால் அலங்கரிக்கின்றார்
7. நல்லவர் நல்லவரே (அவர்) கிருபை உள்ளவரே
அவரது பேரன்பு என்றென்றும் நிலைத்திருக்கும்
8. சஞ்சலமும் தவிப்பும் பறந்து ஓடியதே
நித்திய நித்தியமாய் மகிழ்ச்சி நம் தலையில்
இதயங்கள் மகிழட்டும் – Idhayangal magilatum
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்