
Igathin Thukkam Thunbam – இகத்தின் துக்கம் துன்பம்
1. இகத்தின் துக்கம் துன்பம்
கண்ணீரும் மாறிப் போம்
முடிவில்லாத இன்பம்
பரத்தில் பெறுவோம்.
2. இதென்ன நல்ல ஈடு,
துன்பத்துக்கின்பமா?
பரத்தில் நிற்கும் வீடு
மரிக்கும் பாவிக்கா?
3. இப்போது விழிப்போடு
போராட்டம் செய்குவோம்
விண்ணில் மகிழ்ச்சியோடு
பொற் கிரீடம் சூடுவோம்
4. இகத்தின் அந்தகார
ாக்காலம் நீங்கிப்போம்
சிறந்து ஜெயமாக
பரத்தில் வாழுவோம்.
5. நம் சொந்த ராஜாவான
கர்த்தாவை நோக்குவோம்
கடாட்ச ஜோதியான
அவரில் பூரிப்போம்.