Immattum Ennai Kaathavarae Lyrics – இம்மட்டும் என்னை காத்தவரே
Immattum Ennai Kaathavarae Lyrics – இம்மட்டும் என்னை காத்தவரே
இம்மட்டும் என்னை காத்தவரே
இனியும் என்னை காப்பவரே
தாயின் கருவில் காத்தது போல
இன்றும் என்றும் என்னை காத்திடுவீர்
1.தனியாய் இருந்தேன் துணையாய் வந்தீர்
இருளில் இருந்தேன் ஒளியாய் வந்தீர்
மழையில் நனைந்தேன் குடையாய் வந்தீர்
வெயிலில் நின்றேன் நிழலாய் வந்தீர்
2.பகலில் மேகம் இரவில் அக்கினி
தினமும் மன்னா கொடுத்தீர் ஐயா
தோளில் என்னை சுமந்தீர் ஐயா
கண்மணி போல காத்தீர் ஐயா
3.காற்றும் இல்லை மழையும் இல்லை
வாய்க்கால் எல்லாம் நிரம்ப செய்தீர்
தேவைகள் எல்லாம் கொடுத்தீர் ஐயா
மீதம் எடுக்க செய்தீர் ஐயா
இம்மட்டும் என்னை காத்தவரே