Innal Varaiyil nadathi vantheer – இந்நாள் வரையில் நடத்தி வந்தீர் song lyrics
இந்நாள் வரையில் நடத்தி வந்தீர்
நன்றி சொல்வேனே (2)
1. கூப்பிடும் போது ஓடி வந்தீர்
குறைவெல்லாம் நீக்கினீரே (2)
தோளில் நீர் சுமந்து கொண்டீர்
வழுவாமல் காத்து கொண்டீர்
2. கருவில் என்னை சுமந்து கொண்டீர்
கண்மணிபோல் காத்து கொண்டீர் (2)
போகும்போது கூட வந்தீர்
போதித்து நடத்தினீரே
3. பெலவீனத்தில் நடுங்கினேனே
கை கோர்த்து தேற்றினீரே (2)
பெலன் தந்து தாங்கினீரே
பெலவானாய் மாற்றினீரே
4. ஆசைகளை விளம்பினேனே
ஆச்சரியத்தால் நிரப்பினீரே (2)
அநுகூலமும் துணையுமானீர்
அன்பான நேசர் ஆனீர்