
Intae Nee Ennudan – இன்றே நீ என்னுடன் song lyrics
இன்றே நீ என்னுடன் இருப்பாய் பரதீசில்
என்ற நல்வாக்கு இப்பாவிக்கும் ஈந்தருள்
1.கர்த்தா உம் ராஜ்யத்தில் சேரும் போ தென்னையும்
கருத்தில்வை எனக்கெஞ்சும் கள்ளன் பெற்றாற் போல்
2.கொல்லும் உம் பகைவர்க்குக் கூறும் மன்னிப்பை
கூர்ந்து கள்ளன் கேட்டுக் குணப்படுந்தன்மையாய்
3.குருசில் உன் ரூபத்தைக் கொலைஞன் அகம்பித்து
உருகியே அவனெஞ்சம் உனைப்பற்றச் செய்தாயே