இந்த மட்டும் காத்த எபினேசரே – Intha Mattum Kaatha Ebinesarae
இந்த மட்டும் காத்த எபினேசரே – Intha Mattum Kaatha Ebinesarae
இந்த மட்டும் காத்த எபினேசரே
இனிமேலும் காக்கும் யொகாவாயீரே
யொகாவா நிசி யொகாவா ரூவா
யொகாவா ஷம்மா யொகாவா யாப்பா
நன்றி சொல்வேன்- ஐயா
நன்றி சொல்வேன்
நல்லவரே உமக்கே
நன்றி சொல்வேன்
1.தேவாதி தேவனே நன்றி சொல்வேன்
இராஜாதி இராஜனே நன்றி சொல்வேன்
பரிசுத்த தேவனே நன்றி சொல்வேன்
பரலோக இராஜனே நன்றி சொல்வேன்
2.அன்பான தேவனே நன்றி சொல்வேன்
அடைக்கலமானவரே நன்றி சொல்வேன்
உண்மையுள்ள தேவனே நன்றி சொல்வேன்
உயிருள்ள தெய்வமே நன்றி சொல்வேன்
3.காண்கின்ற தேவனே நன்றி சொல்வேன்
காக்கின்ற தேவனே நன்றி சொல்வேன்
அதிசய தேவனே நன்றி சொல்வேன்
அற்புதங்கள் செய்பவரே நன்றி சொல்வேன்