இறைவன் ஆட்சி மண்ணில் மலரும் – Iraivan Aatchi Mannil Malarum
இறைவன் ஆட்சி மண்ணில் மலரும் – Iraivan Aatchi Mannil Malarum
இறைவன் ஆட்சி மண்ணில் மலரும் விடியல் இன்று வந்ததே
இதயக் குடிலில் அன்பின் தீபம் உதயம் காணும் நாளிதே
வாருங்கள் வாருங்கள் உள்ளம் ஒன்றிக் கூடுங்கள்
வானின் அமுது நம்மில் வந்தார் இதயக் குடிலில் காணுங்கள்
1.மௌன மொழி புன்னகையில் இதழ் விரித்துப் பார்க்கின்றார்
பாசவிழி கண்ணிமையில் அன்பின் ஒளியாகின்றார்
பிஞ்சு மனம் பஞ்சு விரல் நீட்டி நம்மைத் தொடுகின்றார் – 2
பரந்த உலகில் யாவும் துறக்க இருகரங்கள் விரிக்கின்றார் – 2
வாருங்கள் வாருங்கள் விண்மலரைப் பாருங்கள்
வானதேவன் தந்த அன்பின் பரிசை எண்ணிப் போற்றுங்கள்.
2.ஆநிரையில் அரியணையோ நம்மை வியக்க வைக்கின்றார்
அர்த்தம் கொண்ட வாழ்வுக்காக எளிய நிலையைக் கொள்கின்றார்
விடியல் என்னும் செய்தியிலே உலகை ஒன்றி இணைக்கின்றார்-2
மடியும் மனிதம் புனிதம் காண சமத்துவத்தைக் காண்கின்றார் -2
வாருங்கள் வாருங்கள் விண்மலரைப் பாருங்கள்
வானதேவன் தந்த அன்பின் பரிசை எண்ணிப் போற்றுங்கள்.
Iraivan Aatchi Mannil Malarum song lyrics in english
Iraivan Aatchi Mannil Malarum vidiyal intru vanthathae
idhaya kudilil Anbin deepam udhayam kaanu naalithae
vaarungal vaarungal ullam ontri Koodungal
vaanin amuthu nammil vanthar idhay kudilil kaanungal
1.Mouna mozhi punnakaiyil ethal virithu paarkintaar
paasavizhi kannimaiyil anbil ozhiyakintraar
pinju manam panju viral neetti nammai thodukintraar-2
parantha ulagil yaavum thurakka iru karangal virikintraar-2
vaarungal vaarungal vinmalarai paarungal
vaana devan thantha Anbin parisai enni pottrungal
2.Aaniraiyil ariyanaiyo nammai viyakka vaikintraar
artham konda vaalvukkaga eliya nilaiyai kolkintraar
vidiyal ennum seithiyilae Ulagai ontri inaikintraar-2
Madiyum manitham ounitham kaana samathuvaththai kaankintraar-2
vaarungal vaarungal vinmalarai paarungal
vaana devan thantha Anbin parisai enni pottrungal