ஐயையா நான் வந்தேன் – Iyaiya Naan Vanthen song lyrics
ஐயையா நான் வந்தேன் தேவ
ஆட்டுக்குட்டி வந்தேன்
1.துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்
துஷ்டன் எனை அழைத்தீர் தயை
செய்வோம் என்றே இதை அல்லாது போக்கில்லை
தேவாட்டுக்குட்டி வந்தேன்
2.உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய்
ஒழிந்தால் வருவேன் என்று நில்லேன்
தெள் உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்
தேவாட்டுக்குட்டி வந்தேன்
3.எண்ணம் வெளியே போராட்டங்கள் உட்பயம்
எத்தனை எத்தனையோ இவை
திண்ணம் அகற்றி எளியனை ரட்சியும்
தேவாட்டுக்குட்டி வந்தேன்
4.ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்து சுத்திகரித்
தென்னை அரவணையும் மனம்
தேற்றிக் கொண்டேன் உந்தம் வாக்குத்தங்களால்
தேவாட்டுக்குட்டி வந்தேன்
5.மட்டற்ற உம் அன்பினாலே தடை எதும்
மாறி அகன்றதுவே இனி
திட்டமே உந்தம் உடைமை யான் என்றென்றும்
தேவாட்டுக்குட்டி வந்தேன்.
Iyaiya Naan Vanthen song lyrics in English
Iyaiya Naan Vanthean Deva
Aattukutti Vanthean
1.Thuiyyan Neer Soari Paavi Enakkaai Sinthi
Thustan Enai Alaiththeer Thayai
Seivom Entrae Ithai Allaathu Pokkillai
Devattukutti Vanthean
2.Ulla Karaikalil Ontrum Thaanaai
Ozhinthaal Varuvean Entru Nillean
Thel Um Uthiram Karai Yaavum Theerththidum
Devattukutti Vanthean
3.Ennam Veliyae Porattangal Utbayam
Eththana Eththanaiyo Evai
Thinnam Agattri Eliyeanai Ratchiyum
Devattukutti Vanthean
4.Yeattrukondu Mannippeenthu Suththikari
Thennai Aravanaiyum Manam
Thettrikondaen Untham Vaakkuthangalaal
Devattukutti Vanthean
5.Mattrattra Um Anbinaanale Thadai Yethum
Maari Agantrathuvae Ini
Thittamae Untham Udaimai Yaan Entrentrum
Devattukutti Vanthean