Iyya Unatharul puri – ஐயா உனதருள்புரி
பல்லவி
ஐயா, உனதருள் புரி, அருமை மேசையா!
அனுபல்லவி
பொய்யா மருள்வினை, செய்யா துலகதில்
நையா தடிமைகொள், துய்யா, மெய்யா. – ஐயா
சரணங்கள்
1. ஆதா ரமும் நீ யலதார் திருப் பாதா,
சாதா ரண வேத வினோத சங்கீதா,
காதா ர வினவு,நீ தா எனின் குறை,
தாதா, பர குரு நாதா, போதா! – ஐயா
2. அந்தா தி, அனாதி, பிதா ஒரு மைந்தா;
சிந்தா குலமே தவிர், நீடு சுகந்தா;
உந்தா பரம் அருள் எந்தா,ஞானப்ர
பந்தா, வருசதா னந்தா நந்தா! – ஐயா
3. ஈசா, நசராபுரி மேவிய வாசா,
பூசா விதி மாமறை புகழுபதேசா,
மாசா மிகு பவ நாசா, எருசலை
ராசா, ஒரு சரு வேசா, நேசா. – ஐயா