Jeeva Yathrai Sornthu Povathean – ஜீவ யாத்ரை சோர்ந்து போவதேன்

Deal Score0
Deal Score0

1. ஜீவ யாத்ரை சோர்ந்து போவதேன்?
இயேசு என் தீபம் கீதம்;
என் சிலுவை பார மாவதேன்?
இயேசு என் தீபம் கீதம்;
பாதை யெல்லாம் அன்பாய் நிறைத்து,
மகிமையால் நிரப்பிடுவார்;
கிறிஸ்துவே என் நித்ய தோழனாம்,
இயேசு என் தீபம் கீதம்;

பல்லவி
இயேசு என் தீபம்,
இயேசு என் கீதம்;
இயேசு என் தீபம் கீதம்;
இயேசு என் தீபம்,
சேவிப்பேன் அவரை,
இயேசு என் தீபம் கீதம்

2. எதிரிகள் என்னை தாக்கினும்,
இயேசு என் தீபம் கீதம்;
பாதைக்கு வலைகள் வீசினும்,
இயேசு என் தீபம் கீதம்;
கிறிஸ்துவே வழி நடத்துவார்,
அவர் போரில் முன்னே செல்லுவார்
என் நம்பிக்கை எல்லாம் அவரே,
இயேசு என் தீபம் கீதம் – இயேசு

3. திறந்த வாசலை சேரையில்,
இயேசு என் தீபம் கீதம்;
ஜீவிய யாத்திரை முடிவில்
இயேசு என் தீபம் கீதம்;
காலம் எல்லாம் கீதம் இதுவே
மீட்டார் அதால் அன்பு கூருவேன்;
ஜீவன் தந்தார் என்றும் நேசிப்பேன்
இயேசு என் தீபம் கீதம் – இயேசு

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo