காலங்கள் எல்லாம் உம் கரங்களில் – Kaalangal Ellam Um Karangalil
காலங்கள் எல்லாம் உம் கரங்களில் – Kaalangal Ellam Um Karangalil
காலங்கள் எல்லாம் உம் கரங்களில் தான்
பெலப்படுத்தும் தேவனே
பாதைகள் என்றும் உம் கரங்களில் தான்
வழிநடத்தும் தேவனே
கருவில் எனை நீர் தேர்ந்தெடுத்தீர்
உம் அபிஷேகம் தந்தீர்
என் சிறுவயதில் கரம் பிடித்தீர்
என்றும் தாங்கிடுவீர்
இரக்கத்தின் தேவனே பெலனெற்று போனேனே
இரக்கத்தால் பெலன் தந்து தேற்றுமே
வெளிச்சத்தின் தேவனே வழிதப்பி நின்றேனே
வெளிச்சத்தின் பாதையைக் காட்டுமே
உம் மாறா நேசம் பெரிது
அதற்கீடு வேறேது
உம் மாறா கிருபை பெரிது
அதற்கீடு வேறேது
என் இருதயத்தால் உம்மைத் துதிப்பேன்
நெருக்கத்திலும் பிரியேன்
மனம் சோர்வடையும் வேளைகளில்
என்றும் உம்மை நினைப்பேன்
வல்லமை தேவனே மனம் நொந்து போனேனே
வல்லமையால் மனம் மாற்றுமே
பரலோக தேவனே பாவியாய் வாழ்ந்தேனே
பரலோக வழிகாட்டி நீர்தானே
உம் வார்த்தை வல்லமையானது
என்றும் மாறாது
உம் கிரியை அதிசயமானது
என்றும் மாறாது
என் இருதயத்தால் உம்மைத் துதிப்பேன்
என் நெருக்கத்திலும் பிரியேன்
மனம் சோர்வடையும் வேளைகளில்
நான் என்றும் உம்மைத் நினைப்பேன்