kaathu Kulira Paadungal – காது குளிர பாடுங்கள்

Deal Score0
Deal Score0

1. காது குளிர பாடுங்கள்
கிருபா சத்தியம்;
புத்தி தெளியக் காட்டுங்கள்
திவ்விய வசனம்;
வெல்க! சத்திய வேதம்
வாழ்க நித்திய வேதம்

பல்லவி
அமிர்தமே! அற்புதமே!
திவ்விய வசனம்
அமிர்தமே! அற்புதமே!
திவ்விய வசனம்

2. நல்ல செய்தியைக் கூறுமே
கிருபா சத்தியம்
பாவ நாசத்தைக் காட்டுமே
திவ்விய வசனம்;
வான வருஷ மாரி
ஞான பொக்கிஷ வாரி – அமிர்தமே

3. வேத நாயகர் பொழியும்
கிருபா சத்தியம்;
ஜீவா மங்கள மொழியும்
திவ்விய வசனம்
இயேசு எந்தனைப் பாரும்
நித்தம் எந்தனைக் காரும் – அமிர்தமே

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo