கலங்காதே திகையாதே – KALANGATHAE THIGAIYATHAE

Deal Score+4
Deal Score+4

கலங்காதே திகையாதே – KALANGATHAE THIGAIYATHAE

கலங்காதே திகையாதே
உன் கவலை கண்ணீர் நான் கண்டேன்
வருத்தங்கள் உன் பாரங்கள்
நான் சிலுவையில் உனக்காய் ஏற்றுக்கொண்டேன்-2

சொந்தம் பந்தம் மறந்தாலும்
உன்னை உறங்காமல் நான் காத்திடுவேன்
நீ போகும் பாதை எல்லாமும்
உன்னை கரம் பிடித்து வழி நடத்திடுவேன்-கலங்காதே

1.வாழ்க்கையில் தோல்விகள்
போராட்டம் வந்தாலும்
தனிமையில் சோர்ந்து நீ
தவித்து நின்றாலும்-2

உன்னை விசாரிக்க
உன் தேவன் நான் உண்டு-2
ஒரு போதும் கைவிடாமல்
விலகாமல் நான் இருப்பேன்-2-கலங்காதே

2.எதிர்காலம் என்னவென்று
கலங்கி நீ போனாலும்
வீணான பழிகளால்
சோர்வாகி நின்றாலும்-2

உன்னை விசாரிக்க
உன் தேவன் நான் உண்டு-2
ஒருபோதும் கைவிடாமல்
விலகாமல் நான் இருப்பேன்-2-கலங்காதே

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo