kan Vilithu Elunthu Vaa Maanidane -கண் விழித்து எழுந்து வா மானிடனே

Deal Score0
Deal Score0

கண் விழித்து எழுந்து வா மானிடனே
கருணை நாதன் இயேசுவிடம்

சரணங்கள்
1. நிர்ப்பந்தமான உன் நிலையுணரந்து
நீச உலகத்தின் நேயம் மறந்து
துர்க்கந்தமான துர்த்தொழில் துறந்து
தூரதுன்மார்க்க ஜீவியம் பிரிந்து – கண்

2. மனது போல் நடக்கத் துணியாதே
மாய உலகின் வாழ்வை விரும்பாதே
உனதிஷ்டம்போல் நடக்க உன்னாதே
உல்லாச நடக்கை பொல்லாததே – கண்

3. இருதயமுடைந்து நீ எழவேண்டும்
இளைய மகனைப் போல் வரவேண்டும்
பரம தகப்பன் பாதம் விழவேண்டும்
பாவமன்னிப்பை நீ பெற வேண்டும் – கண்

4. பேரன்புறும் பரம தந்தையவர்
பிள்ளை உன்னைச் சதாவும் மறவாதவர்
தூரம் பிரிந்திருக்க மனமற்றவர்
சொந்த வீட்டில் வைத்து சூட்சிப்பவர்! – கண்

5. அசுத்தமறக் கழுவி அலங்கரிப்பார்
ஆடையாக நீதியுடை தரிப்பார்;
பசிக்குப் பருக ஞானப்பால் தருவார்
பரலோக இன்பப் பதவி சேர்ப்பார் – கண்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo