Kanne En Kanmaniye christmas song lyrics – கண்ணே என் கண்மணியே
கண்ணே என் கண்மணியே
கண்மூடி தூங்கு
கன்னிமரியின் மடியில்-கருணை நிறை
கன்னிமரியின் மடியில்
கண்ணுறங்கு ஆரீரராரிரரோ
வாடை வாட்டிடுதோ உந்தன்
மேனி நடுங்கிடுதோ
உலகோரின் பாவங்கள் நீக்கிடவே
உதித்தாயோ மாடடை குடிலினிலே
கண்மணி ஆரீரோ
ஆராரோ ஆரோ
தங்கபாலகனே இந்த
தரணி மகிழ்ந்திடுதே
கனிவான உன் பார்வை இனிதாகிட
பணிவோடு பாடிட துதி பாடிட
கண்மணி ஆரீரோ
ஆராரோ ஆரோ