
Kanneerin Pallathakkil Lyrics – கண்ணீரின் பள்ளத்தாக்கில்
Kanneerin Pallathakkil Lyrics – கண்ணீரின் பள்ளத்தாக்கில்
கண்ணீரின் பள்ளத்தாக்கில் நடந்திட்ட வேளைகளில்
தோள் மீதில் சுமந்து வந்த எந்தன் நேசரே – 2
சோர்வின் மத்தியிலே துவண்டிட்ட வேளைகளில்
தட்டிக்கொடுத்து என்னை தூக்கின தெய்வமே – 2
இயேசப்பா உம்மை பாடுவேன்
எந்தன் தகப்பனே உம்மை உயர்த்துவேன்
எந்தன் இயேசப்பா உம்மை பாடுவேன்
எந்தன் தகப்பனே உம்மை உயர்த்துவேன்
மனிதர்கள் வேண்டாமென்று என்னை தூக்கி எறிந்தாலும்
உமக்கு வேண்டுமென்று சேர்த்துகொண்ட தெய்வமே – 2
கண்ணின் மணி போல கண்ணுக்குள்ளே என்னை வைத்து
காப்பாற்றி வளர்த்து வந்த அன்பு நேசரே – 2
இயேசப்பா உம்மை பாடுவேன்
எந்தன் தகப்பனே உம்மை உயர்த்துவேன்
எந்தன் இயேசப்பா உம்மை பாடுவேன்
எந்தன் தகப்பனே உம்மை உயர்த்துவேன்
பாடுகள் தான் வாழ்க்கையென்று கலங்கின நேரங்களில்
என் கிருபை போதுமென்று தேற்றின தெய்வமே – 2
கண்ணீர் தான் மிச்சமென்று சோர்ந்திட்ட வேளைகளில்
சந்தோஷம் தந்து என்னை அணைத்திட்ட நேசரே – 2
இயேசப்பா உம்மை பாடுவேன்
எந்தன் தகப்பனே உம்மை உயர்த்துவேன்
எந்தன் இயேசப்பா உம்மை பாடுவேன்
எந்தன் தகப்பனே உம்மை உயர்த்துவேன்
சாவின் துக்கங்களில் உறவின் பிரிவுகளில்
அரணாய் வந்து என்னை சூழ்ந்திட்ட தெய்வமே -2
தனிமையின் நேரங்களில் உலகத்தின் வெறுமைகளில்
அபிஷேகம் தந்து என்னை நிரப்பிட்ட நேசரே – 2
இயேசப்பா உம்மை பாடுவேன்
எந்தன் தகப்பனே உம்மை உயர்த்துவேன்
எந்தன் இயேசப்பா உம்மை பாடுவேன்
எந்தன் தகப்பனே உம்மை உயர்த்துவேன்
வழியே இல்லையென்று கலங்கின நேரங்களில்
ஒளியாய் வந்து என்னை நடத்தின தெய்வமே – 2
அலை போல் துன்பம் என்னை நெருக்கின வேளைகளில்
மலை போல் வந்து அதை தடுத்திட்ட நேசரே – 2
இயேசப்பா உம்மை பாடுவேன்
எந்தன் தகப்பனே உம்மை உயர்த்துவேன்
எந்தன் இயேசப்பா உம்மை பாடுவேன்
எந்தன் தகப்பனே உம்மை உயர்த்துவேன்