
Karthaa Enthanai Neer – கர்த்தா எந்தனை நீர்
1. கர்த்தா! எந்தனை நீர்
அழைக்கிறீர், கேட்கிறேன்!
கல்வாரியின் உதிரத்தில்
கழுவப்படவே!
பல்லவி
கல்வாரி நாதா
குருசண்டை வாறேன்
தாழ்மையாய் ஜெபிக்கையில்
சுத்திகரியுமேன்!
2. தளர்ந்த பாவிக்கு
தாறீர் உந்தன் சக்தி!
தீமை யாவும் எனில் நீக்கி
தீ தறச் செய்கிறீர்! – கல்வாரி
3. இன்னும் வா! என்கிறீர்
இனி தன்பு பக்தி
மண்ணிலும் விண்ணிலும் பெற்று
மாசற்று வாழவே! – கல்வாரி
4. உண்மை விடுதலை
பெற்ற ஆத்மாவிலே
எல்லாம் நிறைவேறினதாய்
சாற்றுறீர் சாட்சியாய் – கல்வாரி