
Karunaagara Kaarmenparaa – கருணாகரா காருமென்பரா
பல்லவி
கருணாகரா – காருமென்பரா
அருளளிப்பாயே அண்டினேனுன் தாளே
அனுபல்லவி
வருந்தும் பாவி வந் திளைப்பாறி
விருந்துண் பீரென்று விளம்பினீ ரன்று
சரணங்கள்
1. சந்ததமும் நானே சிந்தனை செய்தேனே
வந்தருள் செந்தேனே! மைந்தன் நம்பினேனே
கந்த மலரா தந்தே னென்னைப் பூராய்
எந்தை இயேசு நாதா! ஏற்றிடுவீர் வேதா – கரு
2. நன்னெறி புகுத்தி நவையதை நீக்கி
இன்னலை யகற்றி இகலதைப் போக்கி
உன் னழகைத் தந்து ஒருங்காய்க் காத்து
உன்னதத் துய்யச் செய் மன்னா இயேசு நாதா! – கரு
3. கூறும் எங்கள் மறைக் குகந்த நல்லிறை
தேறு மவர் ஜெபத் தியானமே என் துறை;
வேறு ஒன்றுமே வேண்டிலேனே மெய்!
பேறு தந்தனையே பேரொளிப் ப்ரகாசா! – கரு