கிறிஸ்தோர்களே நாம் கர்த்தரின் – Kiristhoorgalae Nam Kartharin
கிறிஸ்தோர்களே நாம் கர்த்தரின் – Kiristhoorgalae Nam Kartharin
1.கிறிஸ்தோர்களே, நாம் கர்த்தரின்
மா ஆச்சரியமான
பெரிய உபகாரத்தின்
உயர்த்திக் கேற்றதான
மன மகிழ்ச்சியுடனே
இருந்து, அதின்பேரிலே
சங்கீதம் பாட வேண்டும்.
2.நான் செய்த புண்ணியங்களை
பார்த்தால், அது செல்லாது;
என் சுயமாய்த் துர்க் கிரியை
ஒழிய நன்றிராது.
மகாதிகில் எடுத்தது
நான் செத்து நரகத்துக்கு
தள்ளுண்பேனென்று தீர்த்தேன்.
3.இதோ அநாதியாய்ப் பிதா
என்மேலே அன்பை வைத்து,
என் கேட்டை நீக்கத் தம்முட
இரக்கத்தை நினைத்து,
யாவற்றிலும் உகந்ததை
பாராமல், இந்தப் பாவியை
ரட்சிப்பதற்குத் தந்தார்.
4.ஒன்றான மைந்தனுடனே,
இரங்கக் காலமாமே,
என் நஞ்சின் நேச கிரீடமே,
போய் ஏழையை நீர்தாமே
மீட்டவன் ஆக்கினைகளை
சுமந்தும்மோடே அவனை
வாழ்வியும் என்று சொன்னார்.
5.அட்சணமே என்னண்டையில்
திவ்விய மைந்தன் வந்தார்;
ஓர் கன்னிகையின் கர்ப்பத்தில்
என் ஜென்மமாய்ப் பிறந்தார்;
தெய்வீக ஜோதியை நன்றாய்
மறைத்து, ஏழை ரூபமாய்
திரிந்தார், பேயை வெல்ல.
6.என்னோடே அவர் சொன்னது,
அஞ்சாதே, நான் முன்நிற்பேன்;
நீ என்னைப் பற்றிக்கொண்டிரு,
நீ தப்ப நான் மரித்தேன்;
உன் சொந்தம் நான், என் சொந்தம் நீ
நீ என்னில் பக்தியாய்த் தரி
அப்போதென்றும் பிரியோம்.
7. கொலையுண்டேன், என் ரத்தமும்
சிந்துண்டு செலவாகும்;
இப்பாடுகள் அனைத்தையும்
நீ பற்று, உனக்காகும்;
உன் பாவத்தைச் சுமக்கிறேன்;
உன் சாவை நான் விழுங்குவேன்,
என் நீதியால் பிழைப்பாய்.
8. பரத்தில் என் பிதாவண்டை
நான் ஏறிப்போயிருப்பேன்;
அங்குன்னை ஆண்டு, ஆவியை
உன் நெஞ்சிலே கொடுப்பேன்;
நீ தேறிக் கொண்டென் அறிவில்
வளர, மெய்யின் பாதையில்
உன் காலை நடப்பிப்பார்.
9.நான் செய்து போதிப்பித்ததை
நீ செய்து போதிப்பித்து,
கருத்தாய்த் தெய்வ அறிவை
புவியில் வளர்ப்பித்து,
கலப்பாம் போதகத்துக்கு
மா எச்சரிக்கையாயிரு,
என்றவர் சொல்லிப் போனார்.