
கொல்கொதா மேட்டினிலே – Kolgatha Meattinilae
கொல்கொதா மேட்டினிலே – Kolgatha Meattinilae
கொல்கொதா மேட்டினிலே
கொடூர பாவி எந்தனுக்காய்
குற்றமில்லாத தேவ குமாரன்
குருதி வடிந்தே தொங்கினார்
பாவ சாபங்கள் சுமந்தாரே
பாவியை மீட்க பாடுபட்டார்
பாவமில்லாத தேவகுமாரன்
பாதகன் எனக்காய் தொங்கினார்
மடிந்திடும் மன்னுயிர்க்காய்
மகிமை யாவும் இழந்தோராய்
மாசில்லாத தேவகுமாரன்
மூன்றாணி மீதினில் தொங்கினார்
இரத்தத்தின் பெருவெள்ளம் ஓட
இரட்சிப்பின் நதி என்னில் பாய
ஆதரவில்லா தேவகுமாரன்
அகோரக் காட்சியாய் தொங்கினார்
கல்வாரி காட்சி இதோ
கண்டிடுவாயே கண்கலங்க
கடின மனமும் உருகிடுமே
கர்த்தரின் மாறாத அன்பி னிலே
உள்ளமே நீ திறவாயோ
உருகும் சத்தம் நீ கேளாயோ
உன் கரம் பற்றி உன்னை நடத்த
உன் நெஞ்சை ஆவலாய் தட்டுகிறார்