Maanidarin Appanarae – மானிடரின் அப்பனாரே
1. மானிடரின் அப்பனாரே!
எங்கள் ஜெபம் கேட்டிடும்;
உம்மையே எம் ஐயனாரே!
சேவிக்க அருள் செய்யும்
எங்கள் சேனை
இப்போ ஆசீர்வதியும்
2. சுத்த ஆவியின் வரத்தை,
அடியார்க்கு ஈந்திடும்;
மாளும் எங்கள் தேசத்தாரை,
அன்பாக இரட்சித்திடும்
எங்கள் சேனை
வெல்ல வழி காட்டிடும்
3. பரிசுத்த ஜீவியத்தில்
யாம் தேற கிருபை செய்யும்;
ஓயா விஸ்வாச ஜெபத்தில்
நிலை நிற்க அருளும்
எங்கள் சேனை
மூப்பர் தீட்சை செய்யுமேன்
4. பாவிகளை மீட்க வந்த
பராபர வஸ்துவே!
நீசர்க்காக ஜீவன் தந்த
மானிட அம்பரனே
எங்கள் சேனை
சக்தி பெறச் செய்யுமேன்