Mannavarae Mannavarae Puranthittaru song lyrics – மன்னவரே மன்னவரே
Mannavarae Mannavarae Puranthittaru song lyrics – மன்னவரே மன்னவரே
மன்னவரே மன்னவரே புறந்திட்டாரு நம்ம மண் மேல
உன்ன என்ன மீட்கும் வழி வந்தாரு நம்ம பூமியில
வாழாத வாழ்வத்தான் தந்தவரே நின்னவரு எனக்காக தான்
ராஜாதி ராஜாவே உனக்காக எனக்காக வந்தவருதான்
நான் வாழும் இந்த வாழ்க்கைய தான் தந்தவரு தான்
என் பாவமெல்லாம் பறந்திட தான் நின்னவருதான்
என் மன்னவருதான் என்னோட மன்னவரு தான் என் மன்னவரு தான் மன்னாதி மன்னவருதான்
சரணம் :-
உன்ன என்ன மீட்க வந்த தெய்வம் போல வருமா
ஏழை வடிவில் பூத்திருக்கும் குழந்தை போல வருமா
பாவ சாபம் இங்க இல்ல முடிஞ்சு போச்சு இனிமேல்
அவர பத்தி சொல்லச் சொல்ல சந்தோசம் எல்லை இல்ல
மரணத்தை ஜெயமா ஜெயிச்சவரு சாத்தான காலில மிதிச்சவரு
உனக்காக எனக்காக வாழ்ந்தவரு
அவர போல் இங்க யார் எவரு
அடடா அடடா என்ன அழகு பாலன் இயேசு முகமே
இன்பம் அள்ளி கையில் தந்த அவரு என்னோட வரமே
விண்ணுக்கும் மண்ணுக்கும் ராசாதான் எனையாள வந்த என் ராசாதான்
எத்திக்கும் என் அப்பன் சத்தம் தான்
என் யூத ராஜ சிங்கம் தான்
என் மன்னவரு தான் என்னோட மன்னவரு தான் என் மன்னவருதான் மன்னாதி மன்னவரு தான்
Mannavarae Tamil Christian Christmas Song lyrics