
Maranaththin Koor Udainthathu – மரணத்தின் கூர் உடைந்தது
Maranaththin Koor Udainthathu – மரணத்தின் கூர் உடைந்தது
Maranatthin Koor Udainthathu Song Lyrics :
மரணத்தின் கூர் உடைந்தது பாதாளம் தோற்றது
ராஜராஜனாய் இயேசு உயிர்த்தெழுந்தார் – (2)
அவரோடுகூட நம்மை எழுப்பிட
அவரோடுகூட நாமும் எழும்பிட
அவரோடுகூட நாமும் மகிமைப்பட
(1)
நேற்றும் இன்றும் என்றும் வாழும் அவரைப் பாடுவோம்
மீண்டும் மத்திய வானத்தில் தோன்றும் அவரைச் சேருவோம்
(2)
உலகம் தோன்றும் முன்னே தமக்காய் குறித்தார் நம்மையும்
அதற்காய் இந்த உலகினில் நமக்காய் தந்தார் தன்னையும்
(3)
அன்பின் உறவை முறித்த பகைவனை அரியணை இறக்கவே
ஆளுகை முற்றும் கையில் எடுத்து அவனை நொறுக்கவே
(Rap)
ஆண்டாண்டு காலமாய் ஆண்ட மரணமே
ஆண்டவர் இயேசுவின் பாதம் விழுந்ததே
உலக உறவுகள் மீண்டும் துளிர்த்திட
அன்பு பெருகிட ஆவி பொழிந்ததே
துரைத்தனம் அதிகாரம் அனைத்தையும் உரிந்து
பகையவன் வெறியினை பகலவன் வென்று
படைத்தவை படைத்தவர் உறவுகள் மீண்டும்
கிடைத்ததே இனித்ததே உயிர்தலில் இன்று
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்
- En Mulangaalukkum En Kanneerukkum song lyrics – என் முழங்காலுக்கும்
- Goppa Krupa Telugu christian song lyrics – గొప్ప కృప మంచి కృప
- Unnil Pazhuthu Ondrumillai song lyrics – உன்னில் பழுது ஒன்றுமில்லை
- Uyir Enge Entru Ennai Yaarum song lyrics – உயிர் எங்கே என்று என்னை