மார்கழி குளிரில் பனிவிழும் இரவில் – Margazhi Kuliril Panivilum Iravil
மார்கழி குளிரில் பனிவிழும் இரவில் – Margazhi Kuliril Panivilum Iravil
மார்கழி குளிரில் பனிவிழும் இரவில்
ஒளிதரும் நிலவே புவிபெரும் அழகே
இதழ்ஓசை நான் பாடவா…
என் இருகைகள் உனை ஏந்த வா…
1.புதுப்பாடல் சுகமாகப் பூந்தென்றல் இதமாகப்
புவிஇங்கு மகனானவா
கனவிங்கு நிகழ்வாக உணவெங்கும் பகிர்வாக
உலகத்தின் மீட்பானவா
கடும் நிலைகள் மறைந்தோடும் நீ வரும் காலம்
உன் வரவில் விண்மீன்கள் பேரொளியாகும்
புவியெங்கும் உன்பாட்டு இசைக்கின்றதே
விண்ணவரின் திருக்கூட்டம் தாலாட்டுதே…
2.எல்லாரும் ஒன்றாக இல்லாரும் நன்றாக
வையத்தின் வழியான வா
நினைவெல்லாம் மகிழ்வாக நீதிக்கு நிழலாக
நியாயத்தின் பொருளான வா
உண்மைக்கு உரமாக நீ வரும் நேரம்
என் வாழ்வு வளமாகி புது உலகாகும்
புவியெங்கும் உன்பாட்டு இசைக்கின்றதே
விண்ணவரின் திருக்கூட்டம் தாலாட்டுதே
Margazhi Kuliril Panivilum Iravil song lyrics in English
Margazhi Kuliril Panivilum Iravil
Ozhi tharum nilavae puvi perum alagae
ithal Oosai naan paadava
en irukkaigal unai yeantha va
1.Puthupaadal sugamaai poonthendral idhamaga
puvi ingu magananava
kanavingu nigalvaga unavengum pagirvaga
ulagaththin meetpanava
kadum nilaigal marainthodum nee varum kaalam
un varavil vin meengal pearozhiyagum
puvi engum un paattu isaikintrathae
vinnavarin thirukottam thalattuthae
2.Ellarum Ontraga ollarum nantraga
vaiyaththin vazhiyana va
ninaivellam magivaga neethikku nizhaga
niyaththin porulanava
unmaikku uramga nee varum nearam
en vaalvu valamagi puthu ulagagum
puvi engum un paattu isaikintrathae
vinnavarin thirukottam thalattuthae