
Mattu Thozhuvaththil Maanikkamaaga Lyrics – மாட்டு தொழுவத்தில் மாணிக்கமாக
Mattu Thozhuvaththil Maanikkamaaga Lyrics – மாட்டு தொழுவத்தில் மாணிக்கமாக
மாட்டு தொழுவத்தில் மாணிக்கமாக
மன்னர் இயேசு தான் பிறந்துவிட்டாரே
மண்ணுலகத்தில் மகிழ்ச்சி பொங்கிட
மா மாரியின் மடியினிலே உதித்து விட்டாரே
கிருப நல்ல கிருப
கிருப தேவ கிருப
1.பெத்தலஹேமில் பிறந்தவரே போற்றி துதிக்கணும்
அந்த உத்தமரின் வார்த்தைபடி நீயும் நடக்கணும்
அலேலுயா பாடு
நம்ம ஆண்டவரை தேடு
பெற்றெடுத்த தாய் தந்தையை நீயும் மதிக்கணும்
வேத புத்தகத்தின் வார்த்தைகளை தினமும் படிக்கணும்
கிருப நல்ல கிருப
கிருப தேவ கிருப
2.சத்தியத்தை சொல்வதற்கு மண்ணில் வந்தாரு
புது சரித்திரத்தை படைத்திடவே உயிர்தெழுந்தாரு
அலேலுயா பாடு
நம்ம ஆண்டவரை தேடு
கஷ்ட படும் ஏழைகளுக்கு காட்சி தந்தாரு
எங்க கண்ணீரை துடைத்திடவே கர்த்தர் வந்தாரு
கிருப நல்ல கிருப
கிருப தேவ கிருப
3.மந்தையில் தவறி போன ஆடுகளாக
இந்த மண்ணில் நாமும் வாழ்ந்து வந்தோம் குருடர்களாக
அலேலுயா பாடு
நம்ம ஆண்டவரை தேடு
மானிடர்கள் நாங்க செய்த பாவத்திற்காக
கல்வாரி மலையில் காயம் பட்டர் எங்களுக்காக
கிருப நல்ல கிருப
கிருப தேவ கிருப
Mattu Thozhuvaththil Maanikkamaaga Lyrics in English
Mattu Thozhavththil Maanikkamaaga
Maanar Yesu Thaan Piranthuvittarae
Mannulagathil Magilchi Pongida
Maa Mariyin Madiyinilae Uthiththu Vittarae
Kiruba Nalla Kiruba
Kiruba Deva Kiruba
1.Bethalehemil Piranthavarai Pottri thuthikanum
Antha Uthamarin VaarthaiPadi Neeyum Nadakkanum
Alelluya Paadu
Namma Aandavarai Theadu
Pettredutha Thaai Thanthaiyai Neeyum Mathikkanum
Vedha Putthakaththin Vaarthaikalai Dhinamum Padikkanum
Kiruba Nalla Kiruba
Kiruba Deva Kiruba
2.Saththiyathai Solvatharkku Mannil Vanthaaru
puthu Sarithiraththai Padaithidavae Uyirthelunthaaru
Alelluya Paadu
Namma Aandavarai Theadu
Kasta Padum Yealaikaluku Kaatchi Thantharu
Enga Kanneerai Thudaithidavae Karththar Vanthaaru
Kiruba Nalla Kiruba
Kiruba Deva Kiruba
3.Manthaiyila Thavari Pona Aadukalaaga
Inatha Mannil Naamum Vazhnthu Vanthom Kurdarkalaga
Alelluya Paadu
Namma Aandavarai Theadu
Maanidarkal Naanga Seitha Paavaththirkaaga
Kalvaari Malaiyil Kaayam Pattar Engalukkaga
Kiruba Nalla Kiruba
Kiruba Deva Kiruba