மழலை மன்னனே – Mazhalai Mannaney
மழலை மன்னனே – Mazhalai Mannaney
மழலை மன்னனே மகிழ்ச்சியின் வேந்தனே மாசில்லதா எங்கள் கன்னி மரி பாலனே மாடடை குடிலிலே மந்தைகள் நடுவிலே மானிடராக பிறந்த குழந்தை ஏசு பாலனே
மண்ணகம் மகிழுது விண்ணகம் புகழுது ஏசு உன் பிறப்பினில் இதயம் மகிழுது இருளும் விலகுது அருளும் நிறையுது பாலா உன் வருகையால் புது ஒளி பிறக்குது
பாலா உன் வருகையால் புது ஒளி பிறக்குது
சின்ன பாலாக என் செல்ல பாலாக என் உள்ளத்தில் பிறந்தாய் என் இல்லத்தில் வாழ குளிர் நடுங்கும் இரவினில் சிறு கந்தை துணியினில் நீ கண்ணுறங்கிடு வான் தூதர் தாலாட்ட..
பாவம் போக்கிட பாரினில் பிறந்தவா தாழ்மையை ஏற்று வாழ்வில் மேன்மையை அளித்தவா ஏழை கோலத்தில் தொழுவத்தில் பிறந்தவா ஏங்கும் மனிதருக்கு அமைதியை பகிர்ந்தவா அன்பின் பாதை காட்டிடு எந்தன் சொந்தமாகிடு உன் வழியில் நடத்திடு என் வாழ்வை மாற்றிடு
சின்ன பாலாக என் செல்ல பாலாக என் உள்ளத்தில் பிறந்தாய் என் இல்லத்தில் வாழ குளிர் நடுங்கும் இரவினில் சிறு கந்தை துணியின் நீ கண்ணுறங்கிடு வான் தூதர் தாலாட்ட
விண்ணக தூதர்கள் மகிழ்ச்சி கீதம் பாடிட
மன்னக மனிதருக்காய் மாட்டுக்குடிலில் பிறந்தவ
மனுக்குளம் மீட்படைய மனிதனாக வந்த வா இறைவனில் ஆட்சி அமைய அன்பின் பாதை தேர்ந்தவ
விண்ணில் தூதர் வாழ்த்திட மன்னன் மழலையாகிட உலகம் ஒளியில் நிறந்தது உள்ளம் இன்று மகிழுது
சின்ன பாலாக என் செல்ல பாலாக என் உள்ளத்தில் பிறந்தாய் என் இல்லத்தில் வாழ குளிர் நடுங்கும் இரவினில் சிறு கந்தை துணியினில் நீ கண்ணுறங்கிடு வான் தூதர் தாலாட்ட