மேன்மை நிறைந்த ஆண்டவர் – Meanmai Nirantha Aandavar

Deal Score+1
Deal Score+1

மேன்மை நிறைந்த ஆண்டவர் – Meanmai Nirantha Aandavar

1. மேன்மை நிறைந்த ஆண்டவர்
பூலோகத்தார் எல்லார்க்கும்
தகுந்த நீதி செய்பவர்
இறங்கும் நாள் உதிக்கும்
அப்போது மா பிரஸ்தாபமாய்
எங்கும் விளங்கும் ஜோதியாய்
மின்போலத் தோன்றுவாரே.

2. இலக்கமற்ற தூதர்கள்
அவர்க்கு முன்னதாக
பலத்த சத்த தாரைகள்
உடையவர்களாக
முழக்கம் செய்ய, பூமியும்
விஸ்தாரமான வானமும்
கரைந்து வெந்துபோகும்.

3. அத்தூதரின் எக்காளங்கள்
எத்திக்கிலும் முழங்கும்
அந்நேரம் மாந்தர் கூட்டங்கள்
உயிரடைந்தெழும்பும்
ஓர் பக்கத்தில் சன்மார்க்கரும்
ஓர் பக்கத்தில் துன்மார்க்கரும்
வணக்கமாய் நிற்பார்கள்.

4. சன்மார்க்கர் மோட்ச பாதையில்
நடந்ததால் மகிழ்ந்து,
சிறப்படைந்து நிற்கையில்
துன்மார்க்கரோ அதிர்ந்து
நியாயமான சாபத்தை
அடைந்து, கர்த்தர் முகத்தை
விட்டோடி மாளுவார்கள்.

5. என் மனமே, துன்மார்க்கத்தை
வெறுத்துத் தள்ளிவிட்டு,
அன்புள்ள இயேசு கிறிஸ்துவை
நம்பிக்கையாய்ப் பிடித்து,
கறையும் மாசுமின்றியே
கர்த்தர் முன்பாக நிற்கவே
நீ ஆவலோடு தேடு.

Meanmai Nirantha Aandavar Song Lyrics in English

1.Meanmai Nirantha Aandavar
Poologaththaar Ellarukkum
Thaguntha Neethi Seibavaer
Irangum Naal Uthukkum
Appothu Maa Pirasthabamaai
Engum Vilangum Jothiyaai
Minpola Thontruvaarae

2.Elakkamattra Thoothargal
Avarkku Munnathaga
Balaththa Saththa Thaaraigal
Udaiyavarkalaga
Mulakkam Seiya Boomiyum
Visthaaramaana Vaanamum
Karainthu Venthupogum

3.Aththootharin Ekkaalangal
Eththikkilum Mulangum
Annearam Maanthar Kootangal
Uyiradanthelumbum
Oor Pakkaththil Sanmaarkkarum
Oor Pakkaththil Sanmaarkkarum
Vanakkamaai Nirpaargal

4.Snamaarkkar Motcha Paathaiyil
Nadanthaal Magilnthu
Sirappadainthu Nirkaiyil
Thunmaarkaro Athirnthu
Niyayamaana Saabaththai
Adainthu Karthar Mugaththai
Vittodi Maaluvaargal

5.En Manamae Thunmaarkkaththai
Veruthu Thallivittu
Anbulla Yesu Kiristhuvai
Nambikaiyaai Pidithu
Karaiyum Maasumintriyae
Karthar Munbaga Nirkavae
Nee Aavalodu Theadu

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo