
Meetpa Vaanjikirean – மீட்பா வாஞ்சிக்கின்றேன்
1. மீட்பா வாஞ்சிக்கின்றேன் கிட்டிச்சேர
வார்த்தை செய்கையிலும் தூயோன்
என் இதயத்தினை முத்திரையிட்டுமே
அன்பினால் நிறைப்பீர் சேவை செய்ய
2. அக்கினி ஜுவாலையாய் ஆக்குமென்னை
அழியும் லோகிற்கு உம்மைக் காட்ட
இரத்தத்தை சிந்தியே மரித்தீர் எனக்காய்
ஏற்றுக் கொள்ளுகிறேன் அடைக்கலம்
3. உம்மைத் துதிப்பதில் நேரம் செல்லும்
பெலப்படுத்திடும் தாங்கிக் கொள்ளும்
ஆவியால் நிரப்பி இரட்சையும் ஈந்திடும்
கிறிஸ்துவில் மகிழ்ந்தே முன் சென்றிட