
Meetpar Maritha Kurusandai – மீட்பர் மரித்த குருசண்டை
1. மீட்பர் மரித்த குருசண்டை
நான் ஜெபித்த ஸ்தலத்தண்டை
இரத்தத்தால் மன்னிப்படைந்தேன்
மீட்பருக்கு மகிமை!
பல்லவி
மீட்பருக்கு மகிமை!
மீட்பருக்கு மகிமை
இப்போ என் உள்ளம் மாறிற்று
மீட்பருக்கு மகிமை!
2. ஆச்சரியமாய் உள்ளம் மாறிற்று
இயேசுவின் மாளிகை ஆயிற்று
சிலுவையண்டை உண்டாயிற்று
மீட்பருக்கு மகிமை! – மீட்ப
3. பாவம் போக்கும் மகத்வ நதி!
என்னை சொஸ்தம் செய்த நதி
இயேசுவாலடைந்தேன் இந்த ஸ்திதி
மீட்பருக்கு மகிமை! – மீட்ப
4. இந்த ஜீவ ஊற்றண்டை வா
மீட்பருக்குன் இதயத்தை தா;
மூழ்கி உன் பாவத்தைப் போக்க வா
மீட்பருக்கு மகிமை! – மீட்ப