நாதா இரக்கமில்லையோ – Naada Irakamillaiyo
நாதா இரக்கமில்லையோ – Naada Irakamillaiyo
நாதா இரக்கமில்லையோ
கண்ணோக்கி பார்க்க
உமக்கு மனமில்லையோ -2
கோலும் தடியும் கொண்டு காக்கும்
நிகரில்லா ஆயனே.
நாதா…
ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே,
சீயோனில் மாம்சமாய் உதித்தவரே.
தேவர்கள் நடுங்கிடும் தூதர்கள் பணிந்திடும்
தூயவரே எங்கள் கல்வாரி மலரே
நாதா…
துன்பத்தில் ஆதரவானவரே
ஆளுகை செய்யும் மகத்துவமே,
சோதனை வேளையில் சார்ந்திட அடைக்கலம்
சூழ்ந்திடும் கிருபைகள் அளிப்பவரே.
நாதா…..