Naangal Paava Paarathaal Lyrics – நாங்கள் பாவப் பாரத்தால்

Deal Score+1
Deal Score+1

Naangal Paava Paarathaal Lyrics – நாங்கள் பாவப் பாரத்தால்

1. நாங்கள் பாவப் பாரத்தால்
கஸ்தியுற்றுச் சோருங்கால்
தாழ்மையாக உம்மையே
நோக்கி, கண்ணீருடனே
ஊக்கத்தோடு வாஞ்சையாய்
கெஞ்சும்போது, தயவாய்
சிந்தை வைத்து, இயேசுவே
எங்கள் வேண்டல் கேளுமே.

2. மோட்சத்தை நீர் விட்டதும்,
மாந்தனாய்ப் பிறந்ததும்
ஏழையாய் வளர்ந்ததும்,
உற்ற பசி தாகமும்,
சாத்தான் வன்மை வென்றதும்
லோகம் மீட்ட நேசமும்
சிந்தை வைத்து, இயேசுவே,
எங்கள் வேண்டல் கேளுமே.

3. லாசருவின் கல்லறை
அண்டை பட்ட துக்கத்தை
சீயோன் அழிவுக்காய் நீர்
விட்ட சஞ்சலக் கண்ணீர்
யூதாஸ் துரோகி எனவும்
துக்கத்தோடுரைத்ததும்
சிந்தை வைத்து, இயேசுவே
எங்கள் வேண்டல் கேளுமே.

4. காவில் பட்ட கஸ்தியும்
ரத்த சோரி வேர்வையும்
முள்ளின் கிரீடம், நிந்தனை
ஆணி, ஈட்டி, வேதனை,
மெய்யில் ஐந்து காயமும்,
சாவின் நோவும், வாதையும்
சிந்தை வைத்து, இயேசுவே
எங்கள் வேண்டல் கேளுமே.

5. பிரேத சேமம், கல்லறை,
காத்த காவல், முத்திரை
சாவை வென்ற சத்துவம்
பரமேறும் அற்புதம்,
நம்பினோர்க்கு ரட்சிப்பை
ஈயும் அன்பின் வல்லமை
சிந்தை வைத்து, இயேசுவே,
எங்கள் வேண்டல் கேளுமே.

Naangal Paava Paarathaal Lyrics in English

1.Naangal Paava Paarathaal
Kasthiyuttru Sorunkaal
Thaazhmaiyaa Ummaiyae
Nokki Kanneerudanae
Ookkaththodu Vaanjaiyaai
Kenjum Pothu Thayavaai
Sinthai Vaiththu Yesuvae
Engal Vendal Kealumae

2.Motchathai Neer Vittathum
Maanthanaai Piranthathum
Yealaiyaai Valarnthathum
Uttra Pasi Thaagamum
Saaththaan Vanmai Ventrathum
Logam Meetta Nesamum
Sinthai Vaithu Yesuvae
Engal Vendal Kealumae

3.Lasaruvin Kallarai
Andai Patta Thukkaththai
Seeyon Alivukkaai Neer
Vitta Sanjala Kanneer
Yuthaas Thuroki Enavum
Thukkaththodu Uraithathum
Sinthai Vaithu Yesuvae
Engal Vendal Kealumae

4.Kaavil Patta Kasthiyum
Raththa Sori Viyarvaiyum
Mulllin Kireedam Ninthanai
Aani Eetti Vedhanai
Meiyil Ainthu Kaayamum
Saavin Novum Vaathaiyum
Sinthai Vaithu Yesuvae
Engal Vendal Kealumae

5.Piretha seamam Kallarai
Kaaththa Kaaval Muththirai
Saavai Ventra saththuvam
Paramearum Arputham
Nambinorkku Ratchippai
Aayum Anbin Vallamai
Sinthai Vaithu Yesuvae
Engal Vendal Kealumae

 

நாங்கள் பாவப் பாரத்தால் – Naangal Paava Paarathaal

1. நாங்கள் பாவப் பாரத்தால்
துயரப்பட்டுச் சோருங்கால்
தாழ்மையாக உம்மையே
நோக்கி, கண்ணீருடனே
ஊக்கத்தோடு வாஞ்சையாய்
கெஞ்சும்போது, தயவாய்
சிந்தை வைத்து, இயேசுவே
எங்கள் வேண்டல் கேளுமே.

2. மாந்தனாய் நீர் வந்ததும்,
ஏழையாய் வளர்ந்ததும்,
பசி தாகமும் கொண்டதும்
சாத்தானை நீர் வென்றதும்
மோட்சம் விட்ட விந்தையும்
லோகம் மீட்ட நேசமும்
நீர் நினைத்து , இயேசுவே,
எங்கள் வேண்டல் கேளுமே.

3. காலில் பட்ட கஸ்தியும்
ரத்தம் சொரி வேர்வையும்
முட்கிரீடம், நிந்தனை
ஆணி, ஈட்டி, வேதனை,
உந்தன் ஐந்து காயமும்,
சாவின் நோவும், வாதையும்
நீர் நினைத்து, இயேசுவே
எங்கள் வேண்டல் கேளுமே.

4. திருவுடலடக்கம் , கல்லறை,
காத்த காவல், முத்திரை
சாவை வென்ற சத்துவம்
பரமேறும் அற்புதம்,
நம்பினோர்க்கு ரட்சிப்பை
ஈயும் உந்தன் வல்லமை
நீர் நினைத்து, இயேசுவே,
எங்கள் வேண்டல் கேளுமே.

Naangal Paava Paarathaal Lyrics in English

1.Naangal Paava Paarathaal
Thuyarapattu Sorunkaal
Thaazhmaiyaa Ummaiyae
Nokki Kanneerudanae
Ookkaththodu Vaanjaiyaai
Kenjum Pothu Thayavaai
Sinthai Vaiththu Yesuvae
Engal Vendal Kealumae

2.Maanthaani Neer Vanthathum
Yealaiyaai Valarnthathum
Pasi Thaagam kondathum
Saaththaanai Neer Ventrathum
Motcham Vitta Vinthaiyum
Logam Meetta Nesamum
Neer Ninaithu Yesuvae
Engal Vendal Kealumae

3.Kaalil Patta Kasthiyum
Raththam Sori Viyarvaiyum
Mut Kireedam Ninthanai
Aani Eetti Vedhanai
Unthan Ainthu Kaayamum
Saavin Novum Vaathaiyum
Neer Ninaithu Yesuvae
Engal Vendal Kealumae

4.Thiruvudaladakkam Kallarai
Kaaththa Kaaval Muththirai
Saavai Ventra saththuvam
Paramearum Arputham
Nambinorkku Ratchippai
Eeyum Unthan Vallamai
Neer Ninaithu Yesuvae
Engal Vendal Kealumae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo