Nal Meippar Aadukalukaai – நல் மேய்ப்பர் ஆடுகளுக்காய்
Nal Meippar Aadukalukaai – நல் மேய்ப்பர் ஆடுகளுக்காய்
நல் மேய்ப்பர் ஆடுகளுக்காய்
மரிக்க வந்து, சாவில்
கிடந்த நம்மைத் தயவாய்
நினைக்கும் அன்றிராவில்
அன்புள்ள கையில் அப்பத்தை
எடுத்துஸ்தோத்தரித்து
அதற்குப் பிறகே அதை
சீஷர்களுக்குப் பிட்டு
வாங்கிப் புஷியுங்கள்,இது
உங்களுக்காய்ப் படைத்து
கொடுக்கப்பட்ட எனது
சரீரம் என்றுரைத்து
பிற்பாடு பாத்திரத்தையும்
எடுத்துத் தந்தன்பாக
உரைத்தது அனைவரும்
இதில் குடிப்பீராக
இதாக்கினைக்குள்ளாக்கிய
அனைவர் ரட்சிப்புக்கும்
சிந்துண்டுபோகும் என்னுட
இரத்தமாயிருக்கும்
புது உடன்படிக்கைக்கு
இதோ என் சொந்த ரத்தம்
இறைக்கப்பட்டு போகுது
வேறே பலி அபத்தம்
இதுங்கள் அக்கிரமங்களை
குலைக்கிற ஏற்பாடே
இதற்குச் சேர்ந்தென் பட்சத்தை
நினையுங்கள் என்றாரே
ஆ ஸ்வாமீ உமக்கென்றைக்கும்
துதி உண்டாவதாக
இப்பந்தியால் அடியேனும்
பிழைத்துக் கொள்வேனாக