Namakoru Palagan Pirantharae நமக்கொரு பாலகன் பிறந்தாரே
நமக்கொரு பாலகன் பிறந்தாரே
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்-2
கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலே
அவரின் நாமம் அதிசயமே-2
அதிசய பாலனாய் இன்று பிறந்தார்
அதிசயம் இது அதிசயம்-2-நமக்கொரு
1.இருளை அகற்றும் ஒளியாக
இறைமகன் இயேசு பிறந்தாரே
வழியை நமக்கு காட்டிடவே
பேரொளியாய் அவர் உதித்தாரே
இடையர்கள் அங்கு பார்த்தனரே
ஞானிகள் மூவர் வணங்கினரே-2
அதிசய பாலனாய் இன்று பிறந்தார்
அதிசயம் இது அதிசயம்-2
2.வானமும் பூமியும் படைத்தவர்
உயிருள்ள வார்த்தையாய் இருக்கிறார்
உலகத்தின் பாவத்தை சுமக்கவே
உன்னதராய் மண்ணில் பிறந்தாரே
உலகில் பிறந்தது சமாதானம்
உன்னதத்தின் தேவனுக்கு மகிமையே-2
அதிசய பாலனாய் இன்று பிறந்தார்
அதிசயம் இது அதிசயம்-2-நமக்கொரு