
Nambum Yesu Naathan Nirkiraaraam – நம்பும்! இயேசு நாதன் நிற்கிறாராம்
பல்லவி
நம்பும்! இயேசு நாதன் நிற்கிறாராம் – உம்மை அன்பாய் தேடி
இன்பமா யழைத்துக் கூறுகிறாராம்
அனுபல்லவி
வந்தா லென் கிருபை முற்றுமே நான் தந்து
சொந்த மாக்குவேன் முழு இரட்சை ஈந்தென்று
சரணங்கள்
1. ஒப்புவித்திடும் உமையவருக் கென்றே அவர் வழியை விட்டு நீர்
தப்பிப்போகாமல் தாங்கிக்கொள்ளுமென்றே!
அப்பா உன் சித்தம் ஆகக்கடவதென்று
செப்பினால் முற்றுஞ் செய்வாரே நன்று! – நம்பும்
2. பாவ மகற்றி மா பெந்தம் அறுத்தாரென்றும் – இயேசு நாதனுமக்கு
ஜீவ ஒளியும் கேடகமுமா மென்றும்
தேவ கிருபையைத் தீயோன் பெற்றேனென்றும்
ஆவலாய் இரட்சண்யத் தூதைக் கூறுவீரே – நம்பும்