நீ ஜெயிக்க தானே – Nee Jeyikka Thanae
நீ ஜெயிக்க தானே ஒப்புக்கொடுத்தேன்
கல்வாரி சிலுவையில் பலியானேன்(2)
என் பிரியமே நீ ஜெயங்கொள்ள
சிலுவையில் வெற்றி சிறந்தேன்(2)
ஆதி அன்பை விட்டு
போனதும் ஏனோ?
என் மேல் கொண்ட பாசம்
குறைந்ததும் ஏனோ? (2)
விழுந்த நிலையை நினைத்து
ஆதி நிலைக்கு ஓடி வா!
ஜீவ கனியை புசித்து
நித்தம் என்னோடு வாழ வா! – என் பிரியமே
அனலாய் நின்ற நீ
குளிர்ந்தது ஏனோ?
பாடுகள் வந்ததும்
உடைந்தது ஏனோ? (2)
சோதனையை நீ சகித்து
உண்மையாய் வாழ நீயும் வா
ஓட்டத்தை ஓடி முடித்து
ஜீவ கிரீடம் சுட வா ! – என் பிரியமே