Nesa Yesukaha Yaavium Seivean – நேச இயேசுக்காக யாவையும் செய்வேன்
1. நேச இயேசுக்காக யாவையும் செய்வேன்
என்ன நேரிட்டாலும் பின்வாங்க மாட்டேன்
நற் போர் வீரனைப் போல் நிலைத்து நின்று
நேசர் கற்பனைகள் கைக்கொள்ள என்றும்
பல்லவி
இயேசுக் கென்று யாவும்
செய்வேன் நான் பின்வாங்கேன்;
நேச இயேசுக்காக
எங்கும் நான் செல்வேன்
2. யாவையும் வெறுத்தேன் என் இயேசுவுக்காய்
ஆவலாய்ச் சிலுவை எங்கு மவர்க்காய்
சுமந்து பின்செல்ல எந்தன் ஜீவ நாள்
பூசை இதோ தேவே! எப்போதும் நீ ஆள்! – இயேசு
3. எந்தக் காரியமும் உண்மையாய்ச் செய்வேன்
என்ன நேரிட்டாலும் மெய்யாய் சகிப்பேன்
பாவ அடிமைகள் இரட்சிப்படைய
தளரா வைராக்கியம் தந்திடும் என்னில் – இயேசு