
Oh yesuvae En Paavanj Sumanthaarae – ஓ இயேசுவே என் பாவஞ் சுமந்தோரே
1. ஓ இயேசுவே என் பாவஞ் சுமந்தோரே!
உம்மைத் தேடி ஆத்மம் தவிக்குதே;
மான் நீரோடை தேடி அலையுமாப்போல்
என் உள்ளமும் உம்மைத் தேடுதே தேவனே!
பல்லவி
பாதம் பணிகிறேன்
யாவையும் தாறேன்
நிலைத்துப் போர் செய்ய
என் நேச மீட்பர்க்காய்
2. தேவாவியே! உம் வல்லமையினாலே
பாவம் சுயம் அகந்தையும் கொல்லும்!
என்னுள்ளத்தின் துர் ஆசைகளை நீக்கும்
உமதாலயமாய் என்னுள்ளம் நீர் ஆளும்! – பாதம்
3. உம்மினின்று என்னைப் பிரித்த பாவம்
துக்கத்துடன் நான் வெறுத்து வாறேன்;
என் உள்ளத்தின் இருளை நீர் சிந்திய
உம் இரத்தத்தால் இப்போ சுத்திகரியுமேன் – பாதம்
4. என் நேசரே! நீர் வானாசனம் விட்டீர்!
என் உள்ளத்தில் என்றும் அரசாளும்!
வாஞ்சையுடன் உம்மைத்தேடி நான் இதோ
என் சஞ்சலம் நீங்கக் காத்து ஜெபிக்கிறேன்! – பாதம்