
Oru Maruntharum Kuru Marunthu – ஒரு மருந்தரும் குரு மருந்து Song Lyrics
ஒரு மருந்தரும் குரு மருந்து
உம்பரத்தில் கண்டேனே
1. அருள் மருந்துடன் ஆனந்த மருந்து
ஆதியிற்றானாய் முளைத்த மருந்து
வரும் வினைகளை மாற்றும் மருந்து
வறுமையுள்ளோர்க்கே வாய்த்த மருந்து
2. சிங்கார வனத்தில் செழித்த மருந்து
ஜீவதரு மீதில் படர்ந்த மருந்து
மங்கை ஏவை பவம் மாற்றும் மருந்து
வல்ல சர்ப்ப விஷம் மாய்த்த மருந்து
3. மோசே முதல் முன்னோர் காணா மருந்து
மோட்ச மகிமையைக் காட்டும் மருந்து
தேசத்தோர் பிணியைத் தீர்த்த மருந்து
தீர்க்கதரிசிகள் செப்பிய மருந்து
4. தீராத குஷ்டத்தை தீர்த்த மருந்து
செவிடு குருடூமை தின்ற மருந்து
மானா திரித்துவமான மருந்து
மனுவாய் உலகினில் வந்த மருந்து
5. செத்தோர் உயிர்த்தே எழுந்த மருந்து
ஜீவன் தவறாதருளும் மருந்து
பக்தரைச் சுத்திகரித்திடும் மருந்து
பரம வாழ்வினில் சேர்க்கும் மருந்து