Shop Now: Bible, songs & etc
Paavaththin Paaraththinaal – பாவத்தின் பாரத்தினால் song lyrics
1.பாவத்தின் பாரத்தினால்
தவித்திடும் பாவி என்னை
நின் கிருபை பிரவாகத்தால்
தேற்றிடும் இயேசுநாதா
- கெட்ட குமாரனைப்போல்
துஷ்டனாய் அலைந்தேனப்பா
நின் அன்பை உணராமல்
துரோகம் நான் செய்தேனே - தந்தையை விட்ட பின்பு
தவிடுதான் ஆகாரமோ
மனங்கசிந்து நொந்தேன்
கண்ணீரைத் துடைத்திடுமே - கள்ளனாயினும் நான்
நீர் பெற்ற பிள்ளையல்லோ
கள்ளனுக்கருள் செய்த நீர்
தள்ளாதே சிலுவைநாதா - தந்தை, தாய் தமரெல்லாம்
என்னைக் கைவிடுவார்கள்
சாகும் நாளில் தாங்குவார்
நீரல்லால் யாருமில்லை!