Paaviyai Suththikarikkum – பாவியை சுத்திகரிக்கும்
1. பாவியை சுத்திகரிக்கும்
ஜீவ நதி பாயுது!
தாவி வரும் ஆத்மாவுக்கு
சுயாதீனம் ஈயுது!
பல்லவி
சுற்றி எம்மை ஓடுதிதோ!
சுத்தம் செய்யும் மகா அற்புத நதி!
தேவே சிங்காசனத்திலிருந்து
பாயுது பாவிக்கென்று!
2. தேடி வரும் பாவிகட்கு
தேவை ஈயும் மா நதி!
நாடி அதில் மூழ்கும் போது
ஓடிடுமே எக் கறைகளும்! – சுற்றி
3. இந்த நதிக்குப் போனாயா?
நெஞ்சை சுத்தி செய்தாயா?
உந்தனின் பாவப் பாரம் போய்
சிந்தை தேற்றப் பெற்றாயா?
4. இந்த நதியின் தீரத்தில்
ஏன் தவித்து நிற்கிறாய்?
தந்தை தேவன் சொல்லைக் கேட்டும்
தாமதிப்பது எதற்கு? – சுற்றி