Paninthu Nadanthu Kondarae – பணிந்து நடந்து கொண்டாரே
பணிந்து நடந்து கொண்டாரே பரன் பாலனும்
கனிந்து தாய் தந்தையருக்கு
அணிந்து தேவ தயவைப் பணிந்த மனதினோடு
அவர்க்கு தணிந்து எதிர்முனைந்து சொல்லாதபடி – பணி
1.தந்தை தாய் தனை மதித்து அவருடைய
தயவின் சித்தத்துக் கமைந்த
மைந்தர்கள் உலகினில் வாழ்ந்து இருப்பாரென்று
சிந்தை மகிழ்ந்து பரன் செப்பிய மொழிப்படி – பணி
2.தந்தைக் குகந்த வேளையில் அவருடனே
விந்தை யுடனே பயின்றார்;
நிந்தை யிதுவென்றெண்ணிச் சிந்தைக் கலங்கிடாமல்
எந்த விதமும் நரர் தன்னைப் பின்பற்றியேகப் – பணி
3.பாவம் ஒனறு தவிர நம்மைப் போலப்
பாடுள்ளவராய் நின்றாரே
நாவின் வாக்கினிலே இருந்தாரே புனிதமாய்
பாவீ அவரைக் கண்டு பயிலுவது நன்று – பணி
4.ஆவி பலமடைந்தார்; உலக தேவ
அறிவிலும் நிறைவு கொண்டார்;
தேவ கிருபையிலும் திருமறை முறையிலும்
பூவில் அவர்க்கு நிகர் புனித ரில்லாதபடி – பணி