Panivuzhum Iravilae christmas song lyrics – பனிவிழும் இரவிலே
Panivuzhum Iravilae christmas song lyrics – பனிவிழும் இரவிலே
பனிவிழும் இரவிலே
கடும் குளிர் காலத்தில்
விண்தூதர்கள் கீதம் பாடிட
*நம் இயேசு பிறந்தார் (2)
(chorus)
பாடுவோம் Happy Christmas
வாழ்த்துவோம் merry Christmas
பாலகன் இயேசுவை கொண்டாடுவோம்(2)
1.மகிமையின் தேவன் ஆனவர்
அடிமையின் ரூபம் தரித்தவர்
உலகத்தின் பாவம் போக்கிட
விண்ணின் மேன்மை துறந்தவர்(2)
அவர் நாமம் அதிசயமாமே
ஆலோசனை கர்த்தரே
அவர் வல்லமையுள்ள தேவனவர்
சமாதான பிரபுவே
மேன்மை யாவும் நம்மில் தந்திட
விண்ணவர் மண்ணில்பிறந்தார்(2)-பாடுவோம்
2.அளவில்லா மீட்பை தந்திட
முன்னணையில் இயேசு பிறந்தார்
இருளில் வாழும் மனிதருக்கு
வெளிச்சமாய் புவியில் அவதரித்தார்(2)
அவர் நாமம் பலத்தத் துருகமும்
விடிவெள்ளி நட்சத்திரமே
என் பெலனும் ஜீவனுமானவர்
ஏழ்மையாய் உதித்தாரே.
மகிழ்ந்து பாடுவோம் பாலகனை
நம்மில் ஒருவராய் பிறந்தார்(2)-பனிவிழும்