PARALOGAM ENTHAN DESAMAM – பரலோகம் எந்தன் தேசமாம்

Deal Score0
Deal Score0

PARALOGAM ENTHAN DESAMAM – பரலோகம் எந்தன் தேசமாம்

பரலோகம் எந்தன் தேசமாம்
பூலோகம் மாயலோகமாம் -(2)
அழிந்து போகும் இப்பூமியில்
அழியா(த) உம் வார்த்தை விதைப்பேன்-(2)
(பரலோகம் எந்தன்)

இருளான என் வாழ்க்கையில்
ஒளியாக வந்த தெய்வம் நீர் -(2)
ஒளியான கிறிஸ்து
உம்மை நான் உலகமெங்கும்
பாடித் துதிப்பேன் -(2)
(பரலோகம்எந்தன்)

அற்பமான என் வாழ்க்கையில்-(2)
அன்பின் தெய்வம் தேடி வந்தீர்
அழிவில்லா உன் வார்த்தையை
அகிலமெங்கும் பாடித்துதிப்பேன்-(2)
(பரலோகம் எந்தன்)

பாவியான என் வாழ்க்கையில்
பாவம் போக்க வந்த தெய்வம் -(2)
பரிதபிக்கும் என் தேசத்தில்
பரமன் உம்மைப் பாடித் துதிப்பேன் -(2)
(பரலோகம் எந்தன்)

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo