
Parisutha Vaaluv Arulumean – பரிசுத்த வாழ்வு அருளுமேன்
1. பரிசுத்த வாழ்வு அருளுமேன்
தம் ஜீவ ஊற்றினால் கழுவுவேன்
இருண்ட சிந்தையில்
கிரியை நடத்தும்
சிந்தை உணர்விலும்
அடிமையே
2. தூய சுடரால் நீர் கழுவுமேன்
நீர்சுத்தி செய்தால் நான் நிலைப்பேனே
எண்ணத்தில் திண்ணமாய்
வாஞ்சையால் நிலையாய்
உள்ளத்தில் தூய்மையாய்
வேறூன்றியே
3. திருப்தியில்லையே செய்கை யாவும்
சோம்பலாய் காண்கிறீர் இப்போ தாம்
உள்ளத்தின் ஆழத்தில்
தேடும் தம் சித்தத்தை
நீர் கண்டால் ஆனந்தம்
முதன்மை நீர்
4. என் சித்தம் இப்போ அர்ப்பணிக்கிறேன்
எதுவுமில்லையே களிமண் நான்
கர்த்தா இணங்குமேன்
என்னை வனையுமேன்
தகுதியாக்குமேன்
வாசம் செய்ய